கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று நம் முன்னோர்கள் பண்டைக்காலம் தொட்டே கூறிவரும் தத்துவத்தை மெய்ப்பித்தது புகழ்பெற்ற விஞ்ஞானி கண்டறிந்த பொது சார்புக் கோட்பாடு (theory of relativity) .எனும் தத்துவம்.
ஒரு முறை விஞ்ஞானி ஐன்ஸ்டீன், "நாம் பார்ப்பவையெல்லாம் நிஜமல்ல" எனும் ரீதியில் தான் கண்டறிந்த தத்துவத்தை விளக்குகையில் அவ்விளக்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் அவரிடம் , "தங்கள் கூற்றை ஒப்புக்கொள்ள இயலாது. நான் தற்போது தங்களைப் பார்க்கிறேன், தாங்கள் நிஜமில்லையா?" என்று கேட்டானாம். ஐன்ஸ்டீன் அவனிடம் வானத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த ஒரு நட்சத்திரத்தைச் சுட்டிக் காட்டி, "அந்த நட்சத்திரம் தெரிகிறதா?" என்று கேட்க அவன், "ஆம்" என்று பதிலிறுத்தானாம். பதிலாக ஐன்ஸ்டீன், "அந்த நட்சத்திரம் வெகு காலத்திற்கு முன்பே எரிந்து மறைந்து விட்டது. நீ தற்போது பார்க்கும் ஒளி அந்த நட்சத்திரம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அது வெளீயிட்ட ஒளியே என்று கூறி அந்த உண்மையை விளக்கவே இளைஞன் மலைத்துப் போனானாம்.
அவ்வாறெனில், நாம் காண்பவை அனைத்தும் பொய்யா? நாம் இருப்பதும் பொய்யா? வானும், நதியும் கடலும் மலையும் ஆறும் சோலையும், மான்களும் மீன்களும் என நாம் பார்க்கும் ஜீவராசிகள் அனைத்துப் பொய்யா? உண்மை எது பொய் எது என்று உண்மையிலேயே விளங்கவில்லை.
No comments:
Post a Comment