பல பெயர்கள் எனக்குண்டு..
இனத்தை நேசிப்பதால் இனவாதி..
மொழி பற்றோடிருப்பதால் மொழி வெறியன்..
அடக்குமுறையை வெறுப்பதால் தீவிரவாதி...
அதிகாரம் எதிர்ப்பதால் பயங்கரவாதி..
விடுதலைக்கு கூவுவதால் கூச்சல்காரன்..
சமூக அக்கறை இருப்பதால் வேலை இல்லாதவன்..
பணம் சேர்க்காததால் கேனையன்..
அடிக்கடி அரசியல் பேசுவதால் உருப்படாதவன்..
சாதி மறைப்பதால் நடிகன்...
பார்ப்பனியத்தை எதிர்ப்பதால் பரதேசி..
இட ஒதுக்கீடை ஆதரிப்பதால் அக்கிரமக்காரன்...
தமிழ்த்தேசியம் பேசுவதால் வன்முறையாளன்..
இந்தியத்தை எதிர்ப்பதால் மாவோயிஸ்ட்..ஈழத்தை நேசிப்பதால் புலி...
மொத்தத்தில் வீணாப்போன வெறும்பய என்ற கொள்கைக்காரன்...
No comments:
Post a Comment